பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 15s

யெல்லாம், போர், போர்க்களம், போர்ச் செயல்கள், போர்ப் பண்பாடுகள். இவற்றிலிருந்து எடுத்துத்தான் கையாண்டிருக்கிறார். . .

வீரமான கருத்துக்களும் வீரமான உவமை களும் குறளில் நிறைந்து விளங்குவதால்தான், குறளில் உணர்ச்சிகள் கூடிக் கிடக்கின்றன. - --

  • .

3.

அந்தக் குறளிலே உயிர் இருக்கிறது. உயிர்ப்பு இருக்கிறது. உவப்பு இருக்கிறது. உண்மை இருக் கிறது. அதிலே உலகமே இருக்கிறது.

இதுவரை வள்ளுவரை ஆய்ந்தவர்கள் எல்லாம், அவர் கருத்தில் தோய்ந்தவர்கள் எல்லாம், வள்ளுவரை ஞானியாகப் பார்த்தனர். மதப் பண்பாடு மிக்க மேலோராகப் பார்த்தனர். *

ஆனால், நான் வள்ளுவரை வீரராகப் பார்த் தேன். விவேகியாகப் பார்த்தேன். சான்றோராகப் பார்த்தேன்.

போர் நிகழ்ச்சிகள்தான் விளையாட்டு நிகழச்சி களாகப் பிறந்திருக்கின்றன. அன்று போர் வீரர்கள்

கொண்ட கோலத்தை, செய்த செயல்களைத்தான், இன்று விளையாட்டு வீரர்களும் செய்கிறார்கள்.

ஆனால், சிறுமாற்றம்.

வள்ளுவர்-10