பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 டாக்டர். எல். தவராஜ் செல்லையா

போரில் போராட்டிமுண்டு, மரணமுண்டு. வெற்றியுண்டு. விளையாட்டிலும் போராட்டம் உண்டு. மரணம் போல செயல் இழப்பு உண்டு. வெற்றி உண்டு.

போரில் செயல்கள், தந்திரங்கள், தாக்குதல்

கள், பகைவர் வலி அறிதல், ஒற்றறிதல், தூது விடுதல், போன்றவைகள் உண்டு.

விளையாட்டுக்களில், மேற்காணும் போர்க் செயல்கள் எல்லாம் மெருகேறியிருக்கின்றன். மென்மை பெற்றிருக்கின்றன.

போரில் வாழ்வா சாவா என்பதுதான் தலை தூக்கி நிற்கும். விளையாட்டிலும் வாழ்வா சாவா என்ற தாக்கும் உணர்வு எழுச்சியுடன் நின்று. போராடச் செய்யும்,

எனவே, வாளார் நெடுமாறன் வள்ளுவனசர் என்று புகழ்பெற்ற வள்ளுவரின் குறள்களை ஆராய்ந்து, அவர்தம் கருத்துக்களை இங்கே விளக்கமாகத் தந்துள்ளேன்.

வள்ளுவர் என்னிடம் வருவதுபோலவும், அவருடன் நான் உரையாடி மகிழ்வதுபோல்வும், அவரே அவரது குறள்களைக் கூறி விளக்கம் தருவது போலவும் ஒரு கற்பனைச் சூழலை அமைத்துக் கொண்டு, இந்த நூலை எழுதியுள்ளேன்.