பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 56 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

இரண்டாம் பகுதி

(முதல் பகுதியில் வந்த கருத்துச் சுருக்கம்)

Iநான் எழுத அமர்ந்து, வள்ளுவர் பற்றியே, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது, வள்ளுவர் வருகிறார். தன்னை யாரென்று எனக்கு அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

தான் எழுதிய திருக்குறளில், நிறைய விளை யாட்டுச் சிந்தனைகள் இருக்கின்றன என்று விளக்கம் தருகிறார்.

மக்கள் வகை, மாண்பு வகை, வாழ்க்கை முறை, தக்கார் தகவிலர், சான்றோர், நாகரிகம், என்றெல்லாம் விளக்கி, அவர் காலத்து வாழ்க்கை முறையை, அழகாக விளக்குகிறார். அத்துடன், இக்காலத் தமிழக நிலையை அறிந்து கொள்ள, என்னையும் அழைத்துக் கொண்டு, பல இடங் களுக்குப் போகிறார்.

விளையாட்டுக் கல்வியைக் கற்பிக்கும் கல்லூரி ஒன்றின் ஆடுகளத்திற்குள்ளே சென்று, ஆங்கே ஓரிடத்தில் அமர்ந்து, ஒய்வாக, இருக்கிறபொழுது இந்த இரண்டாம் பகுதி ஆரம்பமாகிறது.)