பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 186

‘அறனறிந்தேம் ஆன்ற பொருள் தெரிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்-மறன் எறிந்த வாளார் நெடுமாறன் வள்ளுவனார் தம்வாயால் கேளா தனவெல்லாங் கேட்டு.’ என்ற கொடி ஞாழன் மாணிபூதனார் பாட்டால் திருவள்ளுவருடைய இயற்பெயர் நெடுமாறன் வள்ளுவர் என்பது பெற்றம்.

திருவள்ளுவர் தம் இளவயதில் தொல் காப்பியம் என்னும் இலக்கண நூலையும், தமிழ் மூவாயிரம் எனும் தத்துவ நூலையும் நன்கு கற்றவர். அரசியல் ஞானமும் உலக அறிவும், மிகுதியும் உடிையவர். வாள் படையைத் தாங்கிச் சண்டை செய்வதில் இணையற்றவர். இவர்கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியுடனும் தனித்துப் பல தடவைகளில் பகைவர்களுடன் மலைத்து, வெற்றி பெற்றவர். அதனாலன்றோ, மாறன்எறிந்த வாளார் நெடுமாறன் வள்ளுவனார் என்று கொடி ஞாழன் மாணிபூதனார் கூறலாயினார்.

திருவள்ளுவர் கி. மு. 75 முதல் கி. பி. 36 வரை வாழ்ந்தவர்.’

(திருமந்திரம் மூவாயிரம், முதற்பகுதி பக்கம் 82-83)

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் சென்னை-108.

7வது மறுபதிப்பு, செப். 1984.