பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 58 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இந்த நிலையில், எனது சிந்தையைக்கவரும் படியான குறிப்புக்களைத் தந்தது திருமந்திரம் எனும் தெய்வாம்சம் மிகுந்த நூல்.

அந்த நூலில் தந்துள்ள கருத்துக்களை நான் அப்படியே எடுத்துத் தந்திருக்கிறேன். அதன்பின் என் விளக்கத்தையும் தந்திருக்கிறேன்.

திருவள்ளுவர் பெயரும் காலமும்

‘பாண்டிய நாட்டில் கி. மு. 50 முதல் கி. பி. 30 வரை அரசாண்ட கருங்கை ஒள்வாள் பெரும்வழுதி காலத்தில், உள் மந்திரத் தலைவராய் இருந்து, வள்ளுவர் எனும் பட்டம் பெற்று, வழுதியின் வேண்டுகோட்கிணங்கி திருக்குறள் எனும் நீதி நூலைப் பாடியவர் வாளார் நெடுமாறன் வள்ளுவனார் ஆவார்.

‘தப்பா முதற்பாவால் தாமாண்ட பாடலினால் முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் எப்பாலும் வைவைத்தக் கூர்வேல் வழுதி மனமகிழ்த் தெய்வத் திருவள்ளுவர்.’

என்ற கீரந்தையார் பாடலினால், வழுதியின் கட்டளைப்படி, வழுதி மனமகிழத், தெய்வத் திருவள்ளுவர் திருக்குறளைப் பாடினார் என்பது பெற்றாம்.