பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வந்தவர் வள்ளுவரா!

எதிரே வந்து நின்ற முதியவரை ஏறெடுத்துப் பார்க்கிறேன். மீண்டும் பார்க்கிறேன்.

வைத்தவிழி வாங்காமல் அவரைப் பார்க் கிறேன். மனதுக்குள்ளே ஒரு பரபரப்பு. குறு குறுப்பு.

வாருங்கள் என்று அழைக்கவும் வாயில்லை! மெய்மறந்து அமர்ந்திருக்கிறேன்.

‘நான் வந்து நேரமாயிற்று’ என்று அவர் பேசு கிறமொழி, செந்தேனாய் எனது சிந்தையெலாம் பரவுகிறது.

சிலிர்த்துக் கொண்டேன். சிரம் தாழ்த்தி அவரைப் பார்க்கிறேன்.