பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 17.3

பூசலும் கோட்டைக்கதவும்

போர் என்றால் பூசல் தானே அடிப்படை. அந்த சண்டையையும், தன் உவமைக்குள் கொண்டு. வரத் தவறவில்லை. அதையும் மிக அருமையாக ஒரு குறளில் கூறுகிறார்.

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியோர்க்கு என்

வாடு தோள் பூசல் உரைத்து. (1237)

தலைவி, தன் நெஞ்சைப் பார்த்து, இப்படிக் கூறுகின்றாள். ஒ நெஞ்சே ! இந்தத் தோழி, என் தலைவரைப் பார்த்து, கொடியவர் என்று கூறுகிறாள். அதனால், நீ தலைவரிடம் சென்று, என் மெலிகின்ற தோள்களின் பூசலை உரைத்து, மேம்பாடு எய்திட வழி காண மாட்டாயோ ?

பூசல் என்றால் சண்டை என்று பொருள்.

சண்டை போட்டால் தான் வழி பிறக்கும் என்ற கொள்கையை, இங்கு மிக அழகாகப் புகுத்திக்

காட்டுகிறார் வள்ளுவர்.

தலைவியின் நெஞ்சமோ, கோட்டைக் கதவு போன்ற வலிமையுடன், காக்கப்பட்டு வருவதாகும். அந்தக் கதவை உடைத்துத் தானே, கோட்டைக் குள் புகமுடியும்.

அந்த அருமையான குறளைப் படியுங்கள்.

காமக் கணிச்சி உடைக்கும் கிறையென்னும் நானுத்தாழ் வீழ்த்த கதவு. (1251)