பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நிறை என்ற கதவு. நாணம் என்ற தாழ். அந்தக் கதவினை உடைத்து விடுகிற வலிமை கொண்டது குந்தாலி என்னும் கோடெறி.

பகை நாட்டின் கோட்டையை முற்றுகை யிட்டு, கோட்டைக் கதவை முட்டி உடைத்து. உள்ளே புகுகின்ற படைகளைப்போல, தாளிட்டி நெஞ்சக்கதவை, காதல் நினைவுகள் உடைக் கின்றன என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவரின் போர் நெஞ்சம் புரிகிறதல்லவா !

தீச்செயல்கள் மட்டுமல்ல ; தான் என்ற தருக்கி னாலும், உடலைக் கவனிக்காமல், காக்காமல் விட்டு விடுகிற காரியத்தாலும், உடலில் தங்கியுள்ள வலிமை, இளமை, அழகு, ஆக்கம், செழிப்பு, வாழ்க்கை, பெருக்கம் எல்லாம், வந்தது போல் போய் விடுகின்றன.

அவை எப்படி வந்து போகின்றன தெரியுமா ?

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளங் தற்று. (332)

கூத்தாடும் இடத்திற்கு வேகமாகக் கூட்டம் வந்து சேரும். கூத்து முடிந்ததும், கூட்டிம் உடனே கலைந்து போய்விடும்.

கூத்தாடும் இடமாக மனிதரையும், கூடுகிற கூட்டமாக செல்வத்தையும் இந்தக் குறளுக்கு பொருள் கூறி, உவமையைக் காட்டுவார்கள்.