பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா. நோய் என்றால் குற்றம் என்றும் கூறலாம். அந்தப் பொருள் விருமாறு பாடிய குறளைக் கேளுங்கள்.

இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் (851)

பிற உயிர்களோடு பொருந்தாமை என்னும் தீயகுணத்தை வளர்க்கும் குற்றத்தை, இகல் என்று கூறுவோர் நூலோர் என்று இந்தக் குறளுக்குப் பொருள்.

இதில் பாரிக்கும் நோய் என்றேனே, இங்கே இந்த நோய்க்கு குற்றம் என்பது தான் பொருள். குற்றம் செய்கிறபோது தானே துன்பம் நேரிடுகிறது என்பதை விளக்கமாக இங்கே கொள்ளலாம்.

நோயை துன்பம் என்று பல இடங்களில் குறித்துப் பாடியுள்ளேன். அதற்குரிய சான்றினைப். பாருங்கள்.

இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும். (853)

மாறுபாடு என்று சொல்லப்படும் துன்பம். செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்றும் நீக்கிவிட்டால், அதனால், அழியாமைக்கு உரிய புகழை உண்டாக்கும். இங்கே, இந்த நோயே துன்ப நோய் ஆகிறது அல்லவா !

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் நோய் (848)