பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 181

குறைந்த அறிவுள்ளவன், அறிவுடையவர்கள் சொல்வதைக் கேட்கவும் மாட்டான். தானாக இவையெல்லாம் செய்யக் கூடியவை என்று அறிந்து கொள்ளவும் மாட்டான். இவனது உயிர், உடலை விட்டுப் பிரியும் வரை, இந்த நிலத்திற்கு சுமை போன்ற ஒரு நோயாவான். அதாவது அவனது பாவயாக்கையானது, இந்தப் பெரும் பூமிக்குப் பாரமாக இருக்கிறது.

ஆகவே, நோய் வந்தால் ஒருவருக்குக் குற்ற மாகவும், சுமையாகவும், துன்பமாகவும் பரந்து விரிந்து. பாழ்படுத்தி நிற்கிறது. இனி, நோய் ஏற்படுகின்ற நிலைகளையும் நாம் சற்று ஆராய்வோம்.

ஒருவருக்கு நோய் என்பது, வருவதற்கே வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் தமது அறிவால், முன்னறிந்து காக்கின்ற வல்லமை கொண்டவராக விளங்கும் ஆற்றலால்.

இதுதான் அறிவார்ந்த நிலை என்று நான் கூறுவேன்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் (429)

வரப்போவதை அறிந்து, காக்க வல்ல அறிவுடையவர்க்கு நோய் உண்டாவதில்லை : வருவதும் இல்லை.