பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 183:

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று (941)

குறைந்தாலும், அல்லது அதிகமானாலும், மருத்துவ நூலோர் எண்ணிய மூன்றும் நோயையும் துன்பத்தையும் உண்டாக்கும் என்பது இதன் பொருள். -

அந்த மூன்று என்பது எது ? வளி முதலா என்ற சொல்லை நீங்கள் கவனிக்க வேண்டும்.

வளி என்றால் காற்று. வளி முதலா என்றால், காற்று, நீர், நெருப்பு என்ற மூன்றும், நம் உடம்பில் நீங்காது நிறைந்திருக்கிறது.

உடம்பிலே காற்று குறைந்தாலும் அல்லது. மிகுதியாகப் போனாலும் : அது போலவே உடம்பில் வெப்ப அளவு அதிகமாகிவிட்டாலும் அல்லது குறைந்து போனாலும். உடல் நோயால் பாதிக்கப்படுகிறது.

இந்தக் காற்று, நீர், சூடு என்பதைத் தான் : ஆயுர்வேதமானது, வாதம், பித்தம், சிலேட்டுமம் என்று கூறுகிறது.

பித்தம் நிறைந்து போனால் வாந்தி , வாதம் நிறைந்து போனால் வீக்கம். சிலேட்டுமம் நிறைந்தால் வெடிப்பு இளைப்பு என்றெல்லாம் நோய்கள் மிகுதியாகிக் கொண்டேபோகும்.