பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.184 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அத்துடன் இன்னும் ஒன்று. உண்ணும் உணவு களில்கூட, அளவு தேவை. உண்ணும்.உணவு அளவில் குறைந்தால், உடலில் இளைப்பு, களைப்பு தோன்றும். அதிகமாகிப் போனால், ஆயிரம் நோய்களை அழைத்து வந்து விடும் என்கிறார் வள்ளுவர்.

காற்று தான் முதலாவது என்று நீங்கள் கூறிய கருத்தை நான் கவனித்தபோது, களிப்பில் ஆழ்ந்து போனேன் என்று நான் எனது பேச்சை ஆரம்பித்தேன்.

நீங்கள் கூறிய வளி என்ற உயிர்க்காற்றை மிகுதியாக மூச்சிழுத்து ; தேவையான அளவைத் தேடிக்கொள்ளத்தான், இத்தகைய விளையாட்டுக் களை, எங்கள் காலத்து மக்கள் விளையாடு கின்றார்கள்.

உயிர்க்காற்றானது உடலில் உயிராக மட்டும் உலவவில்லை. உடம்பின் உள்ளே உயிர்ப்பான நடைமுறைகளை விரைவுபடுத்த, செம்மைப் படுத்தி சீர் செய்ய, சிறப்பாகக் காரியங்களை நடத்தி, தேகத்தைத் திறம் மிகுந்ததாக ஆக்க உதவுகிறது என்றேன்.

இந்தக் கருத்தையும் உங்கள் குறள் ஒன்றில் திணித்திருக்கின்றீர்கள் என்றேன். எப்படி என்றார் வள்ளுவர் ஆச்சரியமாக.