பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 185

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றிக் கெடும். (479)

இந்த அளவறிந்து என்ற சொல் தான், அற்புதமான சொல்லாக உங்கள் குறளில் வந்து

விழுந்திருக்கிறது.

எதற்கும் ஒரு அளவு உண்டு, அது அவசியம் வேண்டும். ஒரு அளவு என்ன என்பதை, ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த அளவினை அறியாது வாழ்கின்ற ஒருவனது வாழ்க்கை, இருப்பது போல் தோன்றி, இறுதியில் இல்லாததாகிப் போய்விடும்.

இதன்பொருள் சரிதான். இந்த சொல் அற்புத மான சொல் என்று ஆரம்பித்தீர்களே என்று என்னைக்கேட்டார் வள்ளுவர்.

நமது முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியையே முக்கியமாகக் கருதி, பேணி, ஒழுகிவந்தனர். காற்றின் பெருமையை அவர்கள் கண்டறிந்து கொண்டதால், அதை உட்கொள்ளும் முறை களுக்கும் அளவு என்று ஒன்றை அளந்து வைத்துக் கொண்டனர். -

காற்றை உள்ளே இழுக்கும் ச்ெயலுக்கு பூரகம் என்றனர். இழுத்த காற்றை நுரையீரலுக்குள் இருத்தி வைத்து அடக்குதலுக்குக்கும்பகம் என்றனர்.

வள்ளுவர்-12