பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வலிமையில்லையேல் திறமையில்லை

ஒருவருக்குப் பகைவராக விளங்குபவர், வேறு யாருமே இல்லை. அவருக்குப் பகைவர் அவரே தான்.

ஒருவரது உடல் வலிமையை அழிக்க, வேறு யாரும் வந்து எதுவும் செய்துவிட முடியாது. அவரது உடல் வலிமை அழிய அவரே தான் காரணமாகிக் கொள்கிறார்.

ஒவ்வொருவரது ஆக்கமும் அழிவும் அவரது நினைவால், கனவால், நிகழ்த்துகிற செயல்களால் தான் அமைகிறது திமிர்கிறது.

தசைகளும் எலும்புகளும் நரம்புகளும் உருவாக்கிய உடலை, அந்த உடல் உருவாக்குகிற உணர்ச்சிகள் தாம், ஆட்டிப்படைக்கின்றன. உடல்

செழிக்கவும், சிறக்கவும் உதவுகின்றன. அது