பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 191

போலவே, உடலை வளர்க்கவும், தளர்த்தவும், அழிக்கவும், அவை துணைபோகின்றன.

எனவேதான், ஒருவரின் வலிமையை வீணாக்கும் மூன்று காரியங்களை முறியடிக்க வேண்டும் என்று பாடினேன் என்று பேசினார் வள்ளுவர்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். (360)

காமத்தைக் காதல் எனலாம். வெகுளியைக் கோபம் என்றும், மயக்கத்தை போதை என்றுகூட நாம் கூறலாம். -

காதல் உணர்வும் செயலும், உணவுக்கு உப்பு போன்றது. உப்பு அளவாக இருக்கும்போது, உணவில் சுவை கூடும் உப்பு அதிகம். ஆனால், உணவு பாழாகிவிடும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியையும் நீங்கள் கேட்டிருப்பீர்களே!

காமத்தில் உழன்றவர்கள், துன்பத்தில் தான் மிதப்பார்கள் என்றார் வள்ளுவர்.

‘விந்து - நொந்து கெட்டான்’ என்று ஒரு பழமொழி இருக்கிறதே என்றேன்.

கோபமோ உணர்வுகளின் கொந்தளிப்பு உணர்ச்சிகளோ நாடிகளை, நரம்புகளை புடைத்