பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அவரின் ஆற்றொழுக்கான பேச்சை, அமுத மாக ரசித்து நானும் கேட்டுக் கொண்டே வந்தேன்.

இக்காலத்து விளையாட்டுக்கள் பற்றி எனக்கு நன்கு புரிகிறது என்றார்.

இந்த விளையாட்டுகளுக்கு அடிப்படைத் தேவை உடல்வலிமைதான். அந்த வலிமையைக் காத்துக் கொண்டு, கற்றுக் கொள்ளும் முறை களை, நீங்கள் தெளிவாக விளக்க வேண்டும் என்றேன்.

மனித வாழ்வின் மேன்மையே அறிவில்தான்

திகழ்கிறது. அறிந்து கொள்வதைத்தான் அறிவு என்கிறோம்.

தானே அறிந்து கொள்வது ஞானம் ஆகும். இது பிறவியிலேயே பெறும் பாக்கியமாகும்.

ஒவ்வொரு நிலையிலும் உணர்ந்து, புரிந்து, அறிந்து கொண்டு, அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகைய அருமையான அறிவை, அனுபவங் கள் மூலமாகப் பெறலாம். கறறுத் தேர்ந்த பெரியோர்கள் வழியேயும் பெறலாம்.

நூல்கள் பலகற்று, நுண்மையான மதிநுட்பம் பெற்ற நுண்மாண் நுழைபுலத்தோர் இடம்