பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 203,

சென்று, கற்கும்போதுதான், சிறந்த அறிவு சேர்ந்து, மிகுதியாகி, வளர்கிறது. -

o

அப்படிப்பட்ட அறிவை எப்படிப் பெற வேண்டும் தெரியுமா? Y

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லாதவர் (305)

செல்வம் உடையவர்கள் முன்னே சென்று. பணிந்து நின்று, பணம் கேட்கும் ஏழைபோல; அறிவுச் செல்வம் நிறைந்த ஆன்றோரிடம் சென்று, அடங்கி நின்று, வணங்கி, அறிவினைப் பெற வேண்டும்.

அப்படி அறிவைப் பெறுகின்றவரே செல்’ வந்தராகிறார்! அடக்கமில்லாமல். வணக்கமில்லா மல், ஆணவக்காரர்களாக இருப்பவர்கள், கடிைய ராகின்றார்கள்.

o ஏனென்றால், கல்விச் செல்வம், உலகத்துச் செல்வம் எல்லாவற்றிலும் உயர்ந்த செல்வமாக உலகில் மதிக்கப்படுகிறது.

கற்றவர்க்குரிய சிறப்பைப் பற்றி ஒரு பாடல் என்றேன். பாடுங்கள் கேட்போம் என்றார். o

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னனுக்குத் தன்தேயம் அல்லால் சிறப்பில்லை. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.