பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

04 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

என் பாடலைக்கேட்டு, உண்மைதான் என்றார். அதுமட்டுமல்ல. ‘அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் என்பது நம் தமிழகத்துக் கொள்கையாக இருந்தது என்று வள்ளுவர் வாயூறிக் கூறினார்.

அதனால், அப்படிப்பட்ட அறிஞர்களை அவமதிக்காது, அவர்களைப் போற்றிப் புகழ்ந்து, கற்க வேண்டும் என்று பாடினேன்.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. (891)

அறிவாற்றல் மிக்க ஆன்றோரை இகழ்வது என்பது ஆன்ற பாவங்களில் தலையாயதாக அமையும். அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண் டிால், எண்ணிய எல்லாவற்றையுமே பெறமுடியும்.

அப்படி ஒழுகுவது, அருமையாக நடந்து கொள்வது, போற்றிச் செய்கின்ற காரியங்களில் எல்லாம் புகழ் மிக்க ஒன்றாக அமையும்.

ஆகவேதான், குருவை திருவாக மதிக்க வேண்டும். எண்ணங்களால் துதிக்க வேண்டும். அப்பொழுதுதான், உண்மையான அறிவு ஊற்றாக வெளிப்படும் என்றார்.

எப்படி என்றேன் பேதமையுடன்.

நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும். (373)