பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் sos

எவ்வளவுதான் நூல்கள் பலவற்றைத் திரட்டி வைத்துக் கொண்டு தேர்ச்சி பெற வேண்டு மென்று தீராத வேட்கையுடன் ஒருவர் படித் தாலும், அவற்றை உள்ளத்தே வாங்கிக் கொண்டு, உண்மையுடன் பதித்து. வளர்த்துக் கொள்கிற போதுதான், அறிவு மிகுதியாக வளரும்.

பொய்யாக, பிறருக்காகப் படிக்கின்ற போது, அறிவு விரிவடைகிற தெளிவு, அங்கே மங்கிப்போய் விடுகிறது.

உண்மை அறிவு இன்னும் சிறப்பாக வளர, நெஞ்சில் நுண்மையையும், நினைவில் திண்மை யையும் பதித்துக் கொள்ள வேண்டும். அங்குதான், அறிவு வளர்ச்சி நீரோட்டமாகப் பரந்து தேரோட்டமாகிச் சிறப்பு பெறுகிறது.

இப்படிக் கற்கும் வேகமும் வெறியும் மிகுதி யானால், என்ன, ஏது, எவ்வளவு என்று அளவு தெரியாமல் போய்விடும்.

அளவு இல்லாமல் போனாலும், அளவு கடிந்து போனாலும், அடுத்துத் தொடர்வதில், ஆன்ற தெளிவு தோன்றாது. மாறாகக் குழப்பமே மனதில் மண்டிக் கொள்ளும். மாளாத சூனிய உணர்வு களே அண்டிக் கொள்ளும்.

ஆகவே, எதையும் அளவு அறிந்து கற்க வேண்டும். இங்கே அளவு என்பது, தன் அறிவு