பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் I 9

‘உலகப்பெரும் புலவர்களில் ஒருவர் என்று. மதிக்கப்படும் பெருமை பெற்றவர் வள்ளுவர். புலவர்களில் திலகம் என்று போற்றப்படும் பேறு பெற்றவர். இவரைப்போல் வேறு எவரும் இலர்’ என்று எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

வள்ளுவருக்குத்தான் எத்தனை பெயர்கள்! எந்தப் புலவருக்கும் இப்படிப்பட்ட புகழ்ப் பெயர்கள் உண்டா? இல்லையே! தேவர், தெய்வப். புலவர், பொய்யில் புலவர், முதற் பாவலர், பெரு நாவலர், மாதாதுபங்கி, செந்நாப் போதார், நாயனார், நான்முகனார், புலவர் என்றெல்லாம் புலமை நிறைந்த பெருமக்களால், விதந்து வள்ளுவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

இரண்டு அடிகளால் எழுதப்பட்டதால், குறள் என்று இவர் அழைத்த நூலுக்கு, திரு என்ற அடைமொழி சேர்ந்துவிட்டது. தெய்வத் தன்மையுடைய திருத்தலங்கள், தெய்வங்களுக்கு முன்னே சேர்க்கப்படும் திரு என்பது இந்தக் குறளுக்கும் முதலாவதாக அமைந்துபோனது, இவர் எழுதிய குறளின் மகிமைபற்றி தெள்ளத்தெளியும். தெரியும். தெளிவாகப் புரியும்.

தான் சொல்ல நினைத்த செய்திகளை, வள்ளுவர் சுவையாகச் சொன்னார். சுருக்கமாகச் சொன்னார். சிந்தையென்னும் சிம்மாசனத்திலே