பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2(” டாக்டர் எஸ், நவராஜ் செல்லையா

மக்கள் விரைந்தோடிச் சென்று, அமர்ந்து அரசாளும் ஆற்றல் ஊட்டுவது போலக் கூறினார்.

சிந்தைக்கினிய, செவிக்கினிய, வாய்க்கினிய தாக மட்டுமன்றி, வாழ்க்கைக்கும் இனியதாகக்கூறி வழிநடத்திட உதவியதால் தான், அவரை ‘வான் புகழ் வள்ளுவர் என்று வாழ்த்தினார்கள்.

வடமொழியோ வேதத்தால் சிறப்புப் பெறு கிறது. தமிழ்மொழியோ குறளால் சிறப்புப் பெறு கிறது என்றனர் வல்லுநரும் வல்லோரும். ஏன் அப்படி ஏற்றிப் புகழ்ந்தனர்?

அவரைப் பார்த்தேன். அமைதியாகத் தலை அசைத்துக் கொண்டார்.

இந்த 1330 அருங்குறள் பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின், போய் ஒருத்தர் வாய்கேட்க நூல் உளவோ என்று பாடுகிறார் நந்தத்தனார் எனும் புலவர்.

இந்த நூலை ஏற்றமுறக் கற்றுவிட்டால், மன்னு தமிழ்ப்புலவராய் மகிமையுடன் வீற்றிருக்க லாம்! ஏனெனில், திருக்குறள் ஒதற்கரிது, உணர் தற்கு அரிது, வேதப்பொருள் மிக விளங்கி உள்ளுந் தொறும் உள்ளம் உருக்கும்’ என்று பாடிப்பரவச, மடைகிறார் மாங்குடி மருதனார்.