பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 209-2

பயிற்சியைத் தவறாக செய்பவர்கள் இருவரும், தங்கள் திறமையைத் தாங்களே அழித்திக் கொண்டு. விடுகின்றார்கள்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். (466)

எங்கள் உடற்பயிற்சியிலும் இந்தக் கருத்து, அதிகமாக வலியுறுத்தப்படுகிறது என்றேன்.

சொல்லுங்களேன் என்றார்.

உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் பரவா. யில்லை. தவறாக உடற்பயிற்சி செய்பவர்கள், தேவைக்கு அதிகமாக செய்பவர்கள், தீமையையே. அதிகம் அடைகின்றார்கள். ஆகவே தான் அளவாக, பயிற்சிகள் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்திக், கூறுகின்றார்கள்.

ஆமாம்.

அடிக்கடி, உரிய முறையில் திறன் நுணுக்கங்: களைக் கற்கும்போது தான், ஆற்றல் மிகுந்த, திறமை நிறைய கிடைக்கிறது என்று கூறியபோது, என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் மறைந்துகிடந்த அர்த்தத்தை என்னால் புரிந்து, கொள்ள முடியாமல் திகைத்து நின்றேன்.