பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எதிராக உள்ளவை தான் தற்பெருமை; கோழமை மிகுந்த கோபம்; நலிவூட்டுகிற காமம்.

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமிதம் நீர்த்து. (431)

இந்த மூன்று தீக்குணங்களை தெளிவாக ஒதுக்கிவிடுபவர்க்கு, திறமைகள் பெருக்கம் பெற்று, பெருமிதத்தை உண்டாக்கும்.

அது மட்டுமல்ல. அந்தத் திறமைகளை வளர்க்கின்ற முயற்சிகளிலும், மும்மரமாக ஈடுபட வேண்டும். பாடுபட வேண்டும். அதில் பக்குவமான வழிகளை, பண்பான நெறிகளைப் பின்பற்ற வேண்டும்.

பின்பற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி, தெரிந்த திறமையை பயன்படுத்தி, தெரியாத திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சிப் போருக்கு, அது எளிதாக அமையும். ஏற்றமுடனும் வளரும். இதோ இந்தக் குறளைக் கேளுங்கள்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணி செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். (462)

அரிய திறமைகளும், தெரிந்த திறமையைப் பயன்படுத்தி பயிற்சி செய்ய, பெரிதும் வளரும்.

ஆனால், செய்யக் - பயிற்சியை செய்யாமல் விட்டுவிடுபவர்கள்; செய்யக் கூடிய