பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 207

யும் கூறுகிறேன் என்று தன் பேச்சைத் தொடர்ந்தார். .

இதுகாறும் அறிவு பெறும் முறைகள் எவ்விதம் அமைய வேண்டும் என்று கூறினேன். இனி ஒவ்வொருவருக்கும் அடிப்படையாய் அமைத் திருக்கும் திறமைகள், வளர்ச்சி பெறக்கூடிய வழி முறைகளை, எவ்விதம் பேணிப் பெருக்க வேண்டும் என்பதையும் கூறுகிறேன். o

திறமையை வளர்க்க முயல்கிறபோது, மூன்று பேய்க் குணங்களை ஒருவர் விட்டொழிக்க வேண்டும்.

தானென்ற செருக்கு: எதற்கெடுத்தாலும் வருகின்ற அடக்க முடியாத கோபம்; சிறுமை தருகின்ற காம உணர்வு. இம் மூன்றையும் முடிந்த வரை தடுத்து ஒதுக்குகிறபோது, திறமை தானே வளர்ந்து கொள்ளும். -

ஒவ்வொரு விளையாட்டிற்கும் அடிப்படிைத் திறன்மகள் (Basic silis) என்று பல உண்டு என்றேன் நான்.

ஆமாம். இங்கே பந்து விளையாட்டுக்கள் பலவற்றையும் நானும் பார்த்து வந்தேனே! அவற்றைப் பார்த்த பிறகு தான் நான் கூறுகிறேன்.

இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவி பணிவு, துணிவு, கனிவு இவற்றிற்கு