பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 223

பெருமை மிகுந்த புகழ் கொடுப்பதை விட்டு,

எல்லோரும் இகழ்கின்ற இழிநிலைக்கு இட்டுச் செல்கிறது.

பொய்படும் அன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். - (836) o

தான் செய்கின்ற தொழிலின் தன்மையும், முறைமையும், மேன்மையும் அறியாது போகிறவன் பேதையாகிறான். அதாவது அறிவற்றவன் ஆகிறான். அவன் தொடங்குகிற எந்த காரியமும் முடிவடையாமல்போகும் பொய்யாகும். அன்றியும் அவன் குற்றவாளியாகியும், இகழ்ச்சி அடைவான். இதுதான் என் குறளின் கருத்தாகும். -

அது மட்டுமா! தான் மேற்கொள்கிற விளையாட்டுத் தொழிலை, மேலும் மேலும் கற்றுக் கொள்ளாமல், ஒருவர் செய்து தவறு கொண்டே வருகிறபோது, அவர் துெ.ாழிலில் சிறப்பு அடையவும் மாட்டார். அவர் ஏற்கனவே கற்று. வைத்திருக்கிற திறமையின் மேலும், அறிவின் மேலும், மற்றவர்க்கு சந்தேகம் தான் ஏற்படும்.

இத்தகைய இழிநிலை விளையாட்டாளர்க்கு வரலாமா? - * .

கல்லாத மேற்கொண்டு ஒருகல் கசடற வல்லதுாம் ஐயம் தரும். (845)