பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

‘இருந்த வெள்ளத்தை, வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போனது” என்று பழமொழி ஒன்றை நீங்கள் கேட்டிருக்கலாம்.

இருக்கின்ற திறமையை வளர்த்துக் கொள் ளாமல் வாழ்நாளை வீணடித்துக் கொண்டிருக்கும் வீரர்களின் நிலைமை, அவர் மேற்கொள்கிற முயற்சியின்மையால், எல்லாம் அழிந்து போகும்.

எவ்வளவோ அறிவுரைகளைக் கூறினாலும், எங்கள் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் எதையும் ஏற்றுக் கொள்வதில்லை என்ற நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது என்றேன்.

அப்படியிருப்பது அறிவுடமையாகாது. அது அழிவிற்கே ஆட்படுத்தும்.

சொந்தப் புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை என்றால், அவன் சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடு. அவன் வாழும் வீட்டிற்கு, வந்திருக்கும் பெரும் நோய் என்றே கூறலாம். அவன் வாழுகிற நாள் வரைக்கும், அவன் ஒரு நோய் போல இருந்து தான் மடிவானே தவிர, நாடு காக்கும் நல்ல மகனாக, வீரனாக, விவேகியாக வாழவே மாட்டான்

இதோ இந்தக் குறளைப் படியுங்கள். புரியும் என்றார்.