பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 225

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். (848)

தனக்கு நன்மையானவற்றைப் பிறர் போதித்து ஏவுகிற போதும் செய்யமாட்டான். தானாகவும் உணர்ந்து தெளிய மாட்டான். செய்யும் தொழிலை சிந்திக்கவும் மாட்டான். அவன் தான் ஒரு அழிவு. நோய் போன்றவன் என்று விளக்கினார் வள்ளுவர்.

நீங்கள் கொஞ்சம் கோபமாகவே கூறியிருக் கின்றீர்கள் என்றேன்.

ஆமாம். திறமை இருக்கிறது. தனக்கு திறமை. இருக்கிறது என்ற உண்மையும் தெரிந்து இருக்கிறது. அந்தத் திறமையை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையில் புகழும், பொருளும், பெருமையும், உயர்வும் உண்டு என்ற நிலைமையும் புரிகிறது. அப்படிப்பட்ட நிலையில் திறமையை மென்மேலும், தேர்ச்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டாமா? அதை விட அவருக்கு என்ன வேலை

இருக்கிறது?

அதனால் தான், திறமை இல்லாதவர்களை, எல்லோரும் ஏளனமாகப் பேசுவர். அதே. சமயத்தில், திறமை மிகுந்த செல்வர்களை, எல்லோரும் சிறப்பு செய்வர். எதிர் வந்து, வாழ்த்துவர் என்றேன்.