பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 டாக்டர் எஸ். நவராஜ் செல்லைய

களது கலங்காத நெஞ்சமும், கரை காணா இலட்சி யமும், கடமை உணர்வும், துன்பத்தைத் துளி கூட நெருங்க விடாமல், நெருக்காமல் ஆக்கிவிடுகிறது.

கடமையில் பற்று இருந்தால் போதும். கலக்கமே வராது. கவனமும் சிதறாது. காரியமும் பதறாது. அந்த மன ஒருமைப்பாடு விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமாக வேண்டும். அந்த அரிய நிலை தான், அவர்களை தேர்ச்சி பெற்றவராக உயர்த்தும் என்று வள்ளுவர் கூறிக் கொண்டிருந்த போது, இடைமறித்தேன் நான்.

எங்கள் வீரர்கள் வெற்றி என்றால், விழுந்து புரண்டு, துள்ளிக் குதித்து மகிழ்வார்கள். தோல்வி என்றால் துவண்டு, தணிந்து, குப்புறப்படுத்துக் கலங்குவார்கள் என்றேன்.

இப்படிப்பட்ட பண்புகள், இன்னல்களையே விளைவிக்கும். ஏற்றத்தைத் தராது.

இப்படி மாறுபட்ட கொள்கை கொண்டவர் கள், தேர்ச்சி பெறமாட்டார்கள். இகழ்ச்சியையே பெறுவார்கள்.

இகல் என்ற சொல்லுக்கு மாறுபாடு என்று பொருள். அந்த சொல்லை வைத்து, ஒரு அதிகாரத்தையே எழுதியிருக்கிறேன். ஒருவர் பிறருடன் பொருதுகின்ற வலிமையை தொலைத்