பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 229.

தற்கு ஏதுவாக உள்ள மாறுபாடு என்று அதற்குப் பொருள்.

உங்கள் வீரர்கள், இந்த மாறுபாட்டுக்குள் தான், மதிமயங்கிக் கிடக்கின்றார்கள் போலும். இந்த பண்பானது, தீய பண்புகளைத் தீவிரமாக வளர்க்கும் நோய் என்றே பாடியுள்ளேன்.

எத்தனையோ வீரமும் விவேகமும் உள்ளவர்கள் கூட, இந்த மாறுபாட்டு அறிவை மேற் கொண்டு விட்டால், அவர்கள் வாழ்க்கை முறை, வலிமை முறையே தவறிப் போகும். அழிந்து போவதும் விரைவில் நடக்கும். அவர்கள், இழந்ததை எந் நாளும் பெறவே முடியாது.

இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் கணித்து (856)

ஆகவே, திறமையே பெருமைக்குரிய சிறந்த வழி. அதன் வளர்ச்சிக்கு உழைப்பதே உயர்ந்த மதி. அதனைத் தொடர்ந்து உயிர் போல் காத்து, எதிர்ப்படும் உடல் துன்பங்களையும், மனத் துன்பங்களையும். இன்பமாகக் கருதிக் கொண்டு. உழைப்பவரின் வாழ்வே உற்சாகம் நிறைந்ததாகக் காணப்படும்,

முயற்சியுடன் பயிற்சி செய்வதைத் துன்பம்

என்றால், அந்தத் துறைக்கு வந்திருப்பதே அறி அவற்ற செயல் அல்லவா! - * }