பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 டாக்டர் எஸ். நவராஜ் செல்லை யா

அதனால், மனிதர்களுக்குள்ளே, முழுதான முத்தாய்ப்பு நிறைந்த முடிவுநிலை ஒன்று, முகிழ்த்துக் கொண்டே இருக்கிறது.

அது என்ன நினைவு என்று நீங்கள் நினைக் கின்றீர்கள் என்று என்னைக் கேட்டார்.

முயற்சிக்கலாம். வந்தால் வெற்றி வரா விட்டால் தோல்வி என்பதாகத் தான் எல்லோரும் நினைக்கின்றார்கள். நானும் அப்படித் தான் நினைக்கின்றேன் என்றேன்.

“அடுத்தடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா’ என்பது தான் எங்கள் கொள்கையாக இருக்கிறது என்று, ஒளவைப் பாட்டியின் பாட்டைப் பாடினேன்.

‘அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்’ என்பது நம்நாட்டுப் பழமொழி அல்லவா! மனிதன் முயற்சித்தால், முடியாதது ஒன்றுமில்லை என்ற கருத்தை, நான் எவ்வளவு அழுத்தந் திருத்தமாகப் பாடியிருக்கிறேன் கேளுங்கள்

அரியளன்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியாற் போற்றி செயின். (537)

முயற்சி செய்தால், முடியாத காரியம் என்று எதுவுமேயில்லை. அந்த முயற்சியை, மனம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்ட மனம்,