பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 23

அந்த நினைவைப் போற்றிக் கொண்டிருக்க வேண்டும். அந்தப் போற்றுகின்ற, மனம் தான். தினமும் நினைவில் ஊற்றாகச் சுரக்கின்ற ஆற்றலை வழங்குகிறது.

அதனால் “தான்’ மனித மனத்தை “பொச்சாவாக் கருவி’ என்று புதுப்பெயரிட்டு அழைத்தேன். *

பொச்சாவாமை என்றால், மறவாமை என்பது பொருள். மறவாத மனம். அந்த மனத்தை, நான் கருவி என்றேன். காரியம் ஆற்றுகின்ற பெரும்பேறு கொண்டது. பெரும் சீரும் கொண்டது மனம்.

அந்த மறவாத மனமானது. போற்றி ஒரு காரியத்தை செய்கிறபோது, செய்து முடிக்க முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை என்பது தான், எங்கள் காலத்து கொள்கையாக இருந்தது.

` இது எப்படி முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு பதில் எளிது. மிகவும் இனியதானது அது. எல்லோராலும் செயல்படக் கூடியது தான்.

மனதில் எண்ணிக்கொண்டுள்ள காரியத்தை, ஏற்றமாய் செய்து வெற்றியைக் குவிக்க முடியும். எப்பொழுது தெரியுமா? அந்த நினைவில் சோர்வு வரக் கூடாது. கருதியது கருத்தை விட்டு அகவுத்