பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘36 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கூடாது. உள்ளத்தில் அந்த எண்ணம் உள்ள தாகவே, செயலுக்கு உரியதாகவே இருக்க வேண்டும்.

உள்ளியது எய்தல் எளிதுமன், மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். (540)

உள்ளியது என்பது உள்ளத்தின் அடித்தளத்தி லிருந்து உருவாகி வருகின்ற இலட்சியம் என்று தானே நீங்கள் குறித்திருக்கின்றீர்கள் என்று கேட்டேன்.

ஆமாம். உள்ளத்தில் உதிப்பது எல்லாமே, நீங்கள் கூறியது போல கொள்கையாகி விடாது. அது கோபுரமாகவும் உயர்ந்து விடாது. எழுகிற எண்ணம் சிறப்பாக இருக்க வேண்டும். உயர்ந்த கொள்கை கொண்டதாக விளங்க வேண்டும். பிறருக்குப் பயனளிப்பதாகவும் அமைந்திடல் வேண்டும்.

அப்படிப்பட்ட எண்ணம் வெற்றி பெறா மற் போனாலும், உயர்வு பெறுகின்ற எண்ணமான முயற்சியை எப்பொழுதும் கைவிட்டு விடக்கூடாது.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (596)

விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உயர்ந்தது தான். அந்த உழைப்பும்,