பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 23?

மனஉறுதியும் வேண்டிற்பாலது தான். முயற்சிகள் எல்லாமே வெற்றிக் கனியை வழங்கிவிடுவதில்லை. அது முனைமுறிந்த போதிலும், முயற்சியை விட்டு விடக் கூடாது என்பது தானே உங்கள் அறிவுரை என்றேன். *

ஆமாம். ஆமாம். அதுவே தான்.

எந்த முயற்சிக்கும் உழைப்புக்கும் அதற்குரிய பலன் நிச்சயமாக உண்டு. அதாவது, உழைப்பின் அளவுக்காவது, உகந்த கூலி கிடைக்கும்.

தெய்வம் வந்து உதவும் என்றாலும், ஒரு காரியம் முடியாது போகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், தனது உடம்பை வருத்தி, செய்த செயலுக்கேற்ற கூலியாவது நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்குப் பெயர் தான் நல்முயற்சி என்பதாகும். -

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். (619)

குன்றாத முயற்சி ஒருவரை, குன்றிலிட்டி விளக்காக ஆக்கிவிடும். அதற்காகவே, மெய்யை, வருத்தவேண்டும். அந்த முயற்சியின் பெருமையை, நிச்சயம் மற்றவர்க்கு உணர்த்தி விடும். அந்த, மகிமையைப் பெறுகிற மார்க்கம் ஒன்று தான். ஒன்றே ஒன்று தான்.