பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.242 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

காலம் தாழ்த்துகிற போது, காரியத்தின் -வீரியமே கெட்டுப் போகிறது. காலம் தாழ்த்துகிற போது, வேறு சில முக்கியமான, துன்ப மிகுதியான காரியங்கள் வந்து இடையிலே புகுந்து, செயல் களைத் திசை மாற்றி விடுகின்றன. ஆகவே, எதையும் நன்றே செப், அதையும் இன்றே செய் என்று முயற்சிக்கும் போது தான், முடியும் வாய்ப்பை அடைகிறது. என்றேன் எங்கள் விளை யாட்டுப் பயிற்சிக்கு இது மிகவும் பொருந்தி வருகிறது என்று கூறினேன். தலையசைத்து

ஆமோதித்தார்.

தொடக்கம் ஒரு செயலுக்கு இருந்தால், அதற் கென்று ஒரு முடிவு வந்து தான் ஆக வேண்டும். அந்த செயல் இனிதே நடை பெறாமல், தொட ராமல் இருக்க, பல துன்பங்களும் துயரங்களும், முட்டுக் கட்டைகளாக வந்து தான் தீரும்.

முயன்றால் முடியும் என்று நம்பிக்கை கொண்டு, பயிற்சி செய்பவர்கள், இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் அஞ்சாது அடுத்து வருகிற முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். தோல்வி வருவது போல் சூழ்நிலை அமைந்தால், அதனை ஆராய்ந்து, அப்புறப் படுத்தி, வெற்றி காண வேண்டும். இது தான், சாதனையாளர்களின் செயல் முறையாகும்.

முடிவு இடையூறும் முற்றி ஆங்கு எய்தும் யடுபயனும் பார்த்துச் செயல் (676)