பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 243

முடிவை எதிர் பார்த்து முயலுவது அறிவுடமை தான்.

ஆனால், எதிர்பார்த்த படியே எல்லாம் நடக்கும், கிடைக்கும், இன்பமளிக்கும் என்றெல் லாம் செயல் படுவது, பல சமயங்களில் சிந்தையை ஒடிக்குமே தவிர, சிலிர்ப்பினைத் தராது.

ஆகவே, ஒரு குறிப்பை நாம் இங்கே உணர்ந்து கொள்வோம்.

வேண்டியதை, விரும்பியவாறு பெற முடியும். எப்பொழுது என்றால், செய்கின்ற காரியத்தை, தவமாக எண்ணி செய்கிற போது தான்.

தவம் என்றால் எனக்கு விளங்க வில்லை என்றேன்.

ஐம்புலன்கள் காட்டுகின்ற ஆசைவழி போகா மல் அடக்குதல்; அறிவுமயமான ஒழுக்க நெறி களில், பழக்க வழக்கங்களில் ஒழுகுதல்; முயற்சியின் முனை முறிக்க வரும் துன்பங்களைப் பொறுத்து, அவற்றை வெற்றிக் கொள்ளும் வலிமையான மன நிலையை வளர்த்துக் கொள்ளுதல். இந்த இனிய பண்புகளைத் தான், தவம் என்றேன் நான்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். (267)