பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 247

அதாவது, மனம் மெலிவின்றி, வினை செய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல்’ என்பது அதற்குப் பொருளாக அமைந்திருக்கிறது.

நான் கூறிய வலிமையும், வற்றாத முயற்சியும், வானுயரும் மன எழுச்சியும் ஆகிய மூன்றும், உள்ளத்திலிருந்து தானே வருகின்றன.

அதனால்தான், ஊக்கம் என்பதற்குப் பதிலாக உள்ளம் என்ற சொல்லை, என் குறளில் பெய்திருக் கிறேன் பாருங்கள்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

கில்லாது நீங்கி விடும். (592)

உள்ளம் என்பதற்கு இங்கே ஊக்கம் என்பது. பொருள். ஆகவே, உள்ளத்தில் ஊக்கம் இருந்தால் அதன் பெயர் உள்ளம். அப்படி ஊக்கம் இல்லாத உள்ளம், வெறும் பள்ளம் என்று நான் முடித்தேன்.

ஆமாம். படுகுழி என்றுகூட நாம் கூறலாம்.

கையிலே உள்ள பொருள், கண் இமைக்கும் முன்னரே கரைந்து போகலாம். காணாமற் போகலாம். கைவிட்டுப் போகலாம். ஆனால் உள்ளத்தில் உள்ள ஊக்கம் எப்பொழுதும் போகக் கூடாது என்பதுதான் எல்லோரிடமும் இருக்க வேண்டிய பெரும் பண்பாகும் என்றார்.