பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

உண்மையான ஊக்கம் இல்லை. அதனால் தான் தோற்றுப் போனார்கள்.

வானொலியை நிறுத்திவிட்டு, வள்ளுவரின் முகத்தைப் பார்த்தேன். ஏதோ கேட்க நினைக் கிறீர்கள். கேளுங்கள் என்றார்.

வீரர்களுக்குத் திறமை இருக்கிறது. ஆனால், ஊக்கம் இல்லை என்கிறார்களே! இந்தத் திறமைக் கும் ஊக்கத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

திறமை என்பது, செயலில் சீர்மையும் செழிப்பும் கொண்டது. அது, பழக்கத்தால், பயிற்சியால் பெருகி வரும் பேறுடையதாகும்.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் காப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் என்கிற பாடல் ஒன்றை, நான் அவரிடம் பாடிக் காட்டினேன்.

ஆமாம். தொடர்ந்து பழகுகிற பயிற்சியின் சிறப்பினால், ஒருவரிடம் இருக்கும் அடிப்படைத். திறன்கள், ஆற்றல் பெற்று வளரும். அழகாக, அருமையாகச் செய்யும் பெருமையைப் பெறும்.

ஆனால், ஊக்கம் என்பது வேறு.

ஊக்கம் என்பது வலி, முயற்சி, மன எழுச்சி. என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.