பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

போராட, தமது குழுவினரின் குழு ஆற்றல் எவ்வளவு உண்டு என்பனவற்றை ஆராய்ந்து முடி வெடித்து செயல் படுகிறபோது தான் வெற்றிபெற முடியும்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (471)

வள்ளுவரிடம், இக்கால விளையாட்டில் கூறப் படுகிற சில ஆங்கில வார்த்தைகளைக் கூறிடி அனுமதி கேட்டேன். சரியென்றார்.

இந்த உத்தி முறைகளைத்தான் ஆங்கிலத்தில் Tactics, Techniques, Skills at 35 m) on Djoustif soir. GT3rio, குழுவின் வலிமைக்கும் விளையாட்டுத் திறமைக்கும் ஏற்ப; திட்டமிட்டு விளையாடப் போகிற தந்திர முறையை Strategy என்பார்கள் என்றேன்.

போர்க்களத்தில் வியூகம் அமைத்துப் போரிடும் முறையும், விளையாட்டில் தந்திரமாக திறங்களைப் பயன்படுத்தும் மு ைற யும் , ஒன்றுபோல்தான் இருக்கிறது என்றேன்.

தமது வலிமை, திறமை, தெரியாமல், எதிரி களுடன் போராடச் செல்கிறவன் ஊக்கமும், வீரமும் எவ்வளவுதான் மிகுதியாக இருந்தாலும், இடையிலே செயல் முறிந்து தோல்வியடைந்து வீழ்வான் என்கிற, குறிப்பையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்,