பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 261

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். (473)

தமது திறமைகளை எவ்வளவு என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும்? ஒழுங்காகப் பயிற்சி செய்கிற போது தானே தெரியும். அப்படி அறியா -மல் போட்டிக்குப் போவது, நிச்சயம் தோல்வி -யைத் தானே நிகழ்த்தும்.

இந்த மூன்று குறிப்புகள் மட்டும் போதாது, முக்கியமான கருத்தையும் நாம் முனைப்பாகக் கொள்ள வேண்டும்.

தன் வலிமை, எதிரி வலிமை, செயல் வலிமை என்பதுடன், எதிர்த்துவருபவர்களை எப்பொழுதும் ஏளனமாக நினைக்கக் கூடாது. எதிரிகளின் திறமை களை உயர்த்தி மதிப்பிட்டு, அவற்றைத் தாக்கவும் தகர்க்கவும் கூடிய வழி வகைகளைச் செய்வதுதான் அறிவுடைமையாகும்.

பிறரது உருவம் கண்டு எள்ளி நகைப்பதும், கேவலப்படுத்த முயற்சிப்பதும், செய்பவர்களுக்கே கேடாக முடியும். - -

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. (667)

உருண்டு வருகின்ற பெரிய தேருக்கு, சக் கரங்கள் முக்கியமானதல்லவா! அந்த சக்கரங்கள்