பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.2 டாக்டர் எஸ். நவராஜ் செல்லை யா

தேரிலிருந்து அகன்று போகாமல் தடுத்து, ஆற்ற லுடன் உருளச் செய்வது எது? அதில் மாட்டி யிருக்கும் சிறிய அச்சாணிகள் அல்லவா!

அச்சாணியை அறிவின்றி அகற்றி விட்டால், அழகுத்தேர் ஒடுவதற்குப் பதிலாக, உடிைந்தல்லவா வீழும்!

அப்படித் தான் எதிராளிகளை, முக்கியமான வர்களாகக் கருத வேண்டும். பிறரது திறமைகளை எக்காரணம் கொண்டும், தரக்குறைவாக நினைக்கக் கூடாது, என்றார்.

பிறரைத் தரக் குறைவாக நினைக்கத். துரண்டுவது, தன்னைப்பற்றி பெரிதாக நினைத்துக் கொள்வதால் தானே ஏற்படுகிறது! என்றதற்கு, அதற்குப் பெயர் தற்பெருமை, தலைக்கணம் என்றார் வள்ளுவர்.

தன்னை யாரென்று சீர் தூக்கிப் பார்க்க இயலாதவரின் திறமையும் வலிமையும், பிறர் கெடுப் பாரின்றியே கெட்டுப் போகும் தீரத் தெரிந்து கொள்ள முடியாத திறமையாளர், திறமை முழுவ தையும் தெளிவாகப் பயன் படுத்த இயலாமல், தி. பட்ட துரும்பாகத் துடித்துப்போவர். அது அவரது ஆற்றலை அழித்து, ஆண்மையை மிதித்து, வெற்றி வாய்ப்பை மடித்து, முடித்து வைத்துவிடும் வேகம் கொண்டது .