பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

யில்லாமல் செயல்படும் வழிகள் என்ன? பண்போடு நடந்து கொள்ளக் கூடிய பாங்குகள் என்ன? என்பனவற்றை எண்ணிப்பார்க்காமல் விளையாடு கிறவன், எதிரிக்கு எளிதானவனாகி விடுகிறான்.

அவனது அறியாமை, ஆணவம், ஆற்றலின்

மையை அளித்து, விரைவில் சோர்வடையச்

செய்து, தோல்விக்கு எளிதில் இட்டுச் சென்று விடுகின்றன.

ஆகவே, போராடும் வழி முறைகளில், பொருத்தமான முறையைத் தேர்ந்தெடுத்து . விதிமுறைகளுக்கு இணங்கி, தவறுகள் இழைக்க முற்படாமல் விளையாடினால் வெற்றி நிச்சயம் தான்.

விளையாட்டுக்களில் ஒவ்வொரு விளையாட் -டுக்கும் என்று பல ஆட்ட முறைகள் உண்டு. ஆளுக்கு ஆள் காவல் முறை. (Man to man): எல்லைக் காவல் முறை_(Zonal Defence): தமக்குரிய Q-356) slrson Gub (poso (Positional play) : தடுத்தாடும் முறை (Defence method) : தாக்கி ஆடும் முறை (Attack method): என்றெல்லாம் நிறைய வழி

முறைகள் உண்டு என்றேன்.

உங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு கருத்தை வலியுறுத்திக் கூற விழைகிறேன். வெற்றி வெற்றி என்று மக்கள் விரும்புகின்றார்கள்.