பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 265

வீரர்களும் விரும்புகின்றார்கள். விளைவுதான் வேறாக உள்ளது என்பதற்கு, மாற்றாக இந்தக் கருத்து உதவும். -

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. (878) வகையறிதல் என்பது விளையாடும் போர் முறையின் தந்திரத்தை அறிந்து கையாளுதல் : தற்செய்தல் என்பது, தனது திறமைகளை அதிக மாக வளர்த்துப் பெருக்கிக் கொள்ளுதல் : தற்காத் தல் என்பது பகைவர்கள் தமது எல்லையை அடைந்துவிடாமல், தற்காப்பு முறைகளைக் கையாளுதல் ; பகைவர் என்பது எதிராளிகள் ! (Opponents). அவர்களின் செருக்கு என்பது அழிவின் முன் படி.

எதிராளிகளின் முனைப்பு அழிகிறபோதே, அவர்கள் திறமைகளும் சரிவடையத் தொடங்கு கின்றன.

ஆகவே, போட்டிகளுக்குப் போகின்றவர்கள், தங்களை நன்கு தயார் செய்துகொண்டு, தகுந்த முறைகளைக் கையாண்டு, மிகுதியான தகுதி நிறை வுடீன் செல்கிறபோது, வெற்றி விரைந்து வந்து மகிழ்விக்கும். இந்தக் குறைகளை நீக்கிவிட்டால், நம் விளையாட்டு வீரர்கள் சிறப்பெல்லாம் பெறு வார்கள் என்று வள்ளுவர் பேசி முடித்தார்.

மகிழ்ச்சியடைந்தாலும், வேறு வினா ஒன்றை வினவ நான் தயாராகினேன். என்ன என்பது போல, என்னை ஏறிட்டுப்பார்த்தார் வள்ளுவர்

வள்ளுவர்-17 e