பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் - 267

குற்றமோ அல்லது தீய காரியங்களோ எதுவும் தமக்கு நேர்வதற்கு முன்னதாகவே, காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன்னே இருக்கும் வைக்கோல் போர்போல எரிந்து அழிந்து விடும் என்று நான் பாடியிருக்கிறேனே என்று தொடங்கினார் தமிழ்த்திருமகனார் வள்ளுவனார். -

விளையாட்டுக்கும் இந்தக் கருத்து அப்படியே பொருந்தி வருகிறதே என்றேன் மகிழ்ச்சியுட ன்

முன்னேற்றம் அடைந்துள்ள இக்கால நாகரீக விளையாட்டுக்களுக்கு என்னென்ன தேவை என்று நீங்கள் எதிர்ப்பார்த்துத் தானே பயிற்சியளிக்கின் lர்கள் என்று என்னைக் கேட்டார்.

விளையாடுகிற முறையில், தமது திறமையை வெளிப்படுத்துவது மட்டும் எங்கள் முக்கிய நோக்க மல்ல. எதிர்த்து விளையாடுகின்றவர்களுடைய திறமை, எடுபடாமல் போகிற அளவுக்கு, அவர்கள் திறமையைப் பயன்படுத்துகின்ற வாய்ப்பைக் குறைத்து விடுவது அல்லது முறித்துவிடுவது என்பது தான், நாங்கள் தருகிற பயிற்சி முறையாகும்.

இதை நீங்கள் எப்படி செய்வீர்கள் என்று விளக்குங்கள் !

எதிர்த்து விளையாடுபவர்கள் எல்லோரும்

இப்படித்தான் திட்டமிட்டு, வியூகம் வகுத்து விளை யாடுவார்கள் என்பதை முன்னதாக அறிந்து