பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so 68 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கொள்ளுதல். இதை நாங்கள் ஆங்கிலத்தில் (Anticipation) என்கிறோம். அதாவது முன்னுணரும் அறிவு என்போம். -

எதிராளிகள் இயக்கம் (Movement) இப்படித் தான் இருக்கும் என்ப்தை, முன்கூட்டியே யூகித்து அறிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள், சிறந்த ஆட்டக்காரர்களாக ஆக முடியும் என்பது எங்கள் நம்பிக்கை என்றேன்.

இந்த முன்னுணரும் அறிவு பற்றி எவ்வளவு தெளிவாக நான் அன்றே பாடி வைத்திருக்கிறேன் கேளுங்கள்.

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். (427)

ஒரு காரியம் இப்படித்தான் நடிக்கும் என்று முன்கூட்டியே அறிந்து கொள்பவர்களே அறிவுடை யோர்கள் என்று அழைக்கப்படுவர். அப்படி அறிய இயலாதவர்கள் கல்லாதவர்கள், அறிவற்றவர்கள் ஆவார்கள்.

ஆவது என்ற சொல்லை மிகவும் ஆழமாகப் பயன்படுத்தி இருக்கின்றீர்கள் என்றேன். ஆமாம், ஒரு காரியம் நடைபெறுகின்றபோதே, அந்தக் காரியம் இப்படித்தான் நடக்கும், இப்படித்தான் முடிவுகளைக் கொடுக்கும், என்பன போன்றட, குறிப்புக்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்தான் ஆவது என்ற அறிவாகும்,