பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 269

இந்த அறிவு எல்லோருக்கும் இருக்காது. வரவும் வராது. செயல்படுகின்ற காரியத்தில் சிந்தையை ஈடுபடுத்தி, சிரத்தையுடன் முழுமுனைப் புடன் இருப்போருக்கே இந்த அறிவு வரும். எழும்.

அதாவது, இந்த ஆவது அறியும் அறிவானது, தினம் செய்கின்ற பயிற்சி மூலம், பக்குவமான அறிவின் மூலமாகவே வளர்வதாகும். இது உழைப்பில் உருவாகின்ற உன்னதத்திருவாகும் என்று வள்ளுவர் பேசிக்கொண்டேயிருந்தார்.

நான் அவரைத் தொடர்ந்து பேச ஆரம் பித்தேன்.

கால் பந்தாட்டம் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே ! அதை வல்லுநர்கள் பலர், கால்பேசும் மொழி என்பார்கள். அதாவது, பந்தை எப்படி இயக்கவேண்டும் என்று, விளையாடுவோரின் கால் பேசுகிறது. அந்த அளவுக்கு, கால்களும் பந்தும் நீண்ட நாட்களாக உறவாடி வருகின்றன.

இப்படிப் பயிற்சி செய்கிற திறத்தினாலே, ஒரு வர்காலில் இருக்கும் பந்து எந்தப்பக்கம் போகும், எப்படி திசைமாறும் என்பதை நன்கு விளையாடிப் பழகியவர்களின் கண்கள் புரிந்து கொள்ளும்.

அப்படிப் புரிந்து கொள்வதைத்தான் முன் உணரும் அறிவு என்று நாங்கள் கூறுகிறோம்,

என்றேன்.