பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வெகுளியும் விளையாட்டும்!

போர்ச் செயல்களில் இருந்து தான் விளையாட் டுக்கள் வடிவம் பெற்றன, வாழ்வு கொண்டன என்பது வரலாறு என்று நீங்கள் கூறினர்கள். விளையாடுகின்றவர்கள் எல்லோருமே கொஞ்சம் வேகம் உடைய வீரர்களாக, சண்டை போடும் சக்தி படைத்தவர்களாக அல்லவா விளங்குகின் றார்கள், என்று வள்ளுவர் என்னிடம் கேட்டார்.

“எங்கள் வீரர்கள், வீராங்கனைகள் சண்டை போடுவது, தகராறு செய்வது, எதிர்ப்பைத் தெரி வித்து ஏகக் குரலில் சத்தமிட்டு, விளையாடாமல், வெளியேறுவது எல்லாம், உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்றேன் மெதுவாக.

போரும் காதலும் தமிழர்களின் இரு கண்கள் என்று பரணிபாடிய தமிழ்க்குலம் அல்லவா ! அதனால் தான் இந்த வேகமும் விறுவிறுப்பும் என்று ஆரம்பித்த வள்ளுவர் ; நீங்கள் அழைத்துச் சென்று காட்டிய அத்தனைப் போட்டிகளிலும் தகராறுகள் நிறைய இருந்தனவே ! நீங்கள் காட்டிய வீடியோ