பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 27s

படத்தில் கூடி, கைகலப்பு இருந்ததே ! என்று தொடர் நிகழ்ச்சிபோன்று, பலசான்றுகளைக் கூறி வந்தார். சான்றோர் அல்லவா அவர், !

இந்த வேகம் ஏன் ? விவேகம் அல்லவே ! மகிழ்ச்சிக்காகத் தானே விளையாட்டு என்றீர்கள் ! மகிழ்ச்சி என்பதற்கு மற்றொரு சொல்தானே விளையாட்டு என்று விளக்கம் தந்தீர்கள் என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

மகிழ்ச்சிக்காக ஆரம்பித்த விளையாட்டு, மனம் விரும்பும் பொழுதுபோக்குக்காக வளைந்து கொடுக்க ஆரம்பித்தது.

பொழுது போக்கும் மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டு, புதுப்பாதை ஒன்றை அமைத்துக் கொடுத்துவிட்டது. அதுதான் பிறர் பாராட்டிப் பேசுகின்ற பெருமையை எதிர்பார்க்கும் பேதமை.

பிறர் புகழப்புகழ வளர்ந்த பெருமை, பின் னாட்களில் பணத்தையும் பெருக்கித் தரத் தொடங் கியது. வசதிகளின் வளர்ச்சிக் கோலம், வானம் கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தது.

புகழ், பணம். வசதி, பெருமை, பாராட்டு என்று விளையாட்டுக்கள் வழங்கிய காரணத்தால், விளையாட்டு என்றால் வெற்றிதான் வேண்டும்.