பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 75.

நிலைமையும் நெகிழ்ந்து நீறுபூத்த நெருப்பாகி. நிகழ்வனவற்றில் வேகத்தை நிறைத்து விடுகிறது,

வாழ்க்கையானாலும் சரி. விளையாட்டானா லும் சரி வேகம் வருகிறபோது, விவேகத்தை நிறைத்துக் கொண்டு வெகுளியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக எத்தனையோ பாடல்களை எழுதியிருக்கிறேனே என்று ஆரம்பித் தார் வள்ளுவர். நானும் கேட்கத் தயாரானேன்.

கோபத்தைக் குணமாகக் கொண்டவன், எவ் வளவு திறமையும், ஆற்றலும் வல்லமையும் கொண் டவனாக விளங்கினாலும் அதன் அறிவை இழந்து, மிகவும் எளியவனாகி விடுகிறான். அவனை யாரும் எந்த இடத்திலும் வென்றுவிட முடியும் என்ற அளவுக்கு, பலம் குன்றியவனாகி விடுகிறான். கோபப்படுகிறவன் திறமைகளில் குறைந்து போகி றான் என்று அன்றே பாடியிருக்கிறேனே.

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது (864) கோபப்படுகிறபோதே, அவனது அறிவு மாய்ந்துபோகிறது. சிந்திக்கும் பாங்கு திசை மாறிப் போகிறது, செய்யும் செயலின் உண்மை வழியும், உலைந்து குலைந்து கலைந்து போகிறது. அவ்வாறு செயல் படுகிறபோது, எதிரிகளின் கை ஓங்கி விடு கிறது. எப்படி ! இப்படித்தான்.

வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது (865)