பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கோபப்படுகிறவன், தான் செய்கின்ற செயலின் வழிபற்றி மறந்து, முன்னுணரும் அறிவையும் இழந்து, வழிமாறி செயல்படுகிறான். தான் சாதிக்கிற, வெற்றி பெறுகிற, திறன்களையும் உரிய நேரத்தில், ஒரு முகப்படுத்தி செய்யாமல் விட்டுவிடுகிறான். கெட்டு விடுகிறான். இதனால் இவனைப்பற்றி மற்றவர்கள் இழித்துரைக்கும் நிலைக்கும் ஆளாகி பழிதனை ஏற்றுக் கொள்கி றான். அப்படிப்பட்ட பழிக்கு ஆளாவது மட்டு மல்ல அவன் பண்பு கெட்டவன் என்ற பெயரெ டுத்து பகைவர்க்கும் வெற்றி பெறுவதற்கு எளிதாக பட்டு விடுகிறான், இப்படிப்பட்ட பெயர் கெடுக்கும் கோபம் அவசியம்தானா என்றார் வள்ளுவர்.

விளையாட்டுக்கு உங்கள் குறள் எப்படி பொருந்தி வருகிறது என்று உணர்ச்சியுடன் பேசி னேன். அவர் கண்கள் குறு நகை பூத்தன.

அதனால்தான், ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்று நமது முன்னோர்கள் கூறினார்கள் போலும் என்றேன.

ஆமாம் வெகுளி வருகிறபோது, வகையறிந்து, தற்செய்து தற்காப்பு (878) திறன் மாய்ந்துபோகிறது என்று பாடினேன். அதுமட்டுமா... சினம் என்பது சினமடைந்தவரை சாய்க்கும் என்பதுடன், சேர்ந் தாரையும் கொல்லும் என்பதால், அதனை நெருப்பு என்றே பாடியிருக்கிறேன் பார்த்தீர்களா ?