பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பிறர்க்குக் கேடு செய்யாத பெருந்தன்மை

போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்தது தான் நமது உலக வாழ்க்கை. இதில் வெற்றி பெற்று உயர்ந்திட வேண்டுமானால், போராடித் தான் வாழவேண்டும். துன்பங்களில் நீராடி, துயரங்களில் எதிர் நீச்சல் போட்டுத் திளைக்கிற போதுதான், எதிர் பார்க்கும் வெற்றிகளையும், புகழ்தனையும் ஈட்டமுடியும். இந்த நமது வாழ்க் கையைத்தான், விளையாட்டுக்கள் எதிரொலித்துக் காட்டுகின்றன.

விளையாட்டுக்களின் நோக்கமும் முடிவும், வெற்றிகளைப் பெறத்தான். வெற்றிக்குவேண்டி யது போராடும் குணம். போராடுவது என்பது பிறருடன் பொருதுவது - எதிர்த்து செயல்படுவது

பிறருடன் முனைப்பு காட்டி பொருதுவதைத் தான், உண்மை வாழ்க்கையில், போர் என்றனர். பழகும் வாழ்க்கையில் விளையாட்டு என்றனர்.

வள்ளுவர்-18